கா ஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, ஒரு கட்டடப் பொறியாளனாய் திருக்கழுக் குன்றத்தில் வசித்து வருகிறேன். என் உறவினர்களில் சிலர் ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர் என தமிழ் இலக்கியச் சூழலில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சூழல், நான் ஒரு கதாசிரியனாய் உருவாவதற்குத் தூண்டுகோலாய் அமைந்தது எனலாம். இன்றைக்கு நாற்பது அகவையைக் கடந்துவிட்ட நிலையில், நான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்த்தபோது, அவற்றில் காயத்தின் கறைகள் படித்த முட்கள் வழியெங்கும் முறிந்து கிடப்பதைக் கண்டுணர்ந்தேன். என் கால் தடங்களையும் அவற்றைச் சூழ்ந்துள்ள சில அனுபவங்களையும் என் நினைவுகளிலிருந்து திரட்டி சேகரித்தேன். என் பள்ளி கல்லூரி காலங்கள், வேலை தேடி அலைந்த நாட்கள், வேலை கிடைத்தபோது ஏற்பட்ட அனுபவங்கள், நட்பு, காதல், குடும்ப உறவுகள்... எனக்கு நிகழ்ந்தவை, என்னை பாதித்தவை, சமூகம் மீதான எனது பார்வை, என் மீதான சமூகத்தின் பார்வை என என்னுள் பதிந்த நினைவுகளைத் தொகுத்து 13 சிறுகதைகளாக்கி 'கல்வெட்டுகள்' எனும் முதல் சிறுகதை நூல...